EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்திவருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசு சார்பில் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரண உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில், கொரோனா பரவலைத் தடுக்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக 16,500 கோடி ரூபாய் வழங்கி உதவுவதாக ஆசியா வளர்ச்சி வங்கி உறுதியளித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவுவதற்கு தயாராக இருப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.