EBM News Tamil
Leading News Portal in Tamil

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன? | Gold, Silver Rate today in Chennai


சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000 என்ற நிலையை கடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்துக்கு விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த டிச. 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது.

பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜன.15) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.7,340-க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.58,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது. பண்டிகை காலம், டாலர் மதிப்பு உயர்வு, அமெரிக்க அதிபர் பதவியேற்பு நெருங்குவது போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடைசியாக கடந்த அக்டோபரில் தங்கம் விலை பவுன் ரூ.59,640-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்த நிலையில் மீண்டும் அதையே நோக்கி தங்கம் விலை பயணிக்கிறது என்று கூறலாம்.