EBM News Tamil
Leading News Portal in Tamil

FD வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு! எஸ்பிஐ விட இந்த வங்கிகளில் அதிக வட்டி தருகிறார்கள்!

கொரோனா வைரஸ் பாரபட்சம் இல்லாமல் பலரையும் பாதித்து இருக்கிறது. இதில் பாதிக்கப்படாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

வங்கியில் நிம்மதியாக ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) போட்டு வைத்துக் கொண்டு, அதில் இருந்து வரும் வட்டி வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தவர்கள் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் சொல்லலாம்.

எஸ்பிஐ வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு கீழ் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (Fixed Deposit) கொடுத்திருக்கும் வட்டி விகிதங்களை, அதே 2 கோடி ரூபாய்க்கு ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஆக்ஸிஸ் என்ன வட்டி விகிதங்கள் கொடுக்கிறார்கள் என ஒப்பிடப் போகிறோம். இந்த வட்டி விகிதங்கள் 60 வயதுக்கு உட்பட்ட சாதாரண குடிமகன்களுக்கு மட்டுமே பொருந்தும். மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்களை இதில் ஒப்பிடவில்லை.

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடந்த 28 மார்ச் 2020 அன்று தான் தன் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான (FD) வட்டி விகிதங்களைக் குறைத்தது. அதே போல ஹெச்டிஎஃப்சி வங்கியும் கடந்த 18 மார்ச் 2020 அன்று தான் தன் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள்.

ஆக்ஸிஸ் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் 2 ஏப்ரல் 2020 நிலவரப்படி கொடுத்து இருக்கிறோம் எனச் சொல்கிறார்கள். ஆனால் அந்த லிங்கை சொடுக்கினால் 18-02-2020 அன்றைய வட்டி விகிதங்கள் தான் வருகின்றன. ஆனால் URL லிங்கில் 02-04-2020 அன்றைக்கான தேதி தான் இருக்கிறது. எனவே அது ஆக்ஸிஸ் வங்கியின் புதிய வட்டி விகிதமாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.