EBM News Tamil
Leading News Portal in Tamil

ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக மகேஷ் குமார் ஜெயின் நியமனம்!

டெல்லி: ரிசர்வ் வங்கிக்கு புதிய துணை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐடிபிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்தவர் மகேஷ் குமார் ஜெயின். இவர் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக, 3 ஆண்டுகளுக்கு அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மத்திய அமைச்சரவையின் நியமன கமிட்டி அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமாரின் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கி துணை ஆளுநருக்கான தேர்வில், எஸ்.பி.ஐ நிர்வாக இயக்குநர்கள் ஸ்ரீராம், குப்தா மற்றும் யு.சி.ஓ வங்கி நிர்வாக இயக்குனர் சரண் சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
முன்னதாக துணை ஆளுநராக இருந்த எஸ்.எஸ்.முந்த்ராவின் 10 மாத பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து புதிய துணை ஆளுநருக்கான தேடல் நடைபெற்றது.
ஜெயினிற்கு வங்கித் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. ஐடிபிஐ வங்கிக்கு முன்பாக, இந்தியன் வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். மேலும் பல்வேறு வங்கி சார்பான ஆலோசனைக் குழுக்களில் இடம்பெற்றுள்ளார்.