இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ X7 ப்ரோ (5 ஜி ), போக்கோ X7 (5 ஜி ) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வெளியிட்டார். புதிதாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள இரண்டு போன்களிலும் பேட்டரி லைஃப், டிஸ்ப்ளே போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன.
சிறப்பம்சங்கள்: போக்கோ X7 ( 5 ஜி ) விலை ரூ, 19,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூசி, தண்ணீரைத் தாங்கும் வகையில் இதன் டிஸ்ப்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்படும் வசதியும் உள்ளது. மேம்படுத்தப்பட்ட திறனையுடைய கேமரா வசதியுடன், எடிட்டிங்கும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
காஸ்மிக் சில்வர், க்லேசியர் கிரீன் வண்ணங்களில் வரும் போக்கோ X7 , இளமையான, நேர்த்தியான, நெகிழ்வுதன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போக்கோ X7 ப்ரோ: போக்கோ X7 ப்ரோ (5 ஜி) விலை, ரூ 24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 90 வாட் ஹைப்பர் சார்ஜ் தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிலிக்கான் கார்பன் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளதால் பேட்டரி அதிகச் செயல்திறன், நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது.
பேட்டரி 6550 mAh கொண்டிருப்பதால் சராசரியாக இரண்டு நாள்கள்வரைகூட நீடித்திருக்கும். போக்கோ X7 ப்ரோவில் இரட்டை கேமரா செட்டிங் உள்ளது. ப்ரைமரி சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக சினிமா தரத்திற்கு வீடியோவை எடுக்கலாம் . மஞ்சள், காஸ்மிக் சில்வர், க்ளேசியர் வண்ணங்களில் கிடைக்கிறது.
போக்கோ X7 ப்ரோ ஜனவரி 14 அன்றும் போக்கோ X7 ஜனவரி 17 அன்றும் விற்பனைக்கு வருகிறது.