ரூ.15 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி குறைக்கப்பட வாய்ப்பு | Income tax reduction possible for those earning up to Rs 15 lakhs
புதுடெல்லி: மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: வரும் மத்திய பட்ஜெட்டில், ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியை குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ள நிலையில் மக்களின் வாங்கும் சக்தியை ஊக்குவிக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், இது வரிச் சுமையில் இருக்கும் நடுத்தர வகுப்பினருக்கு மிகப்பெரிய பெரிய நிவராணமாக அமையும். இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த வரி குறைப்பு திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் வரிசெலுத்தும் லட்சக்கணக்கானோருக்கு மிகுந்த பலன் அளிக்கும். குறிப்பாக, நகர்புறங்களில் அதிக வாழ்க்கை செலவினங்களை எதிர்கொண்டு வருபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.