சென்னை: கோயம்பேடு சந்தையில் பொதுமக்களால் அதிகம் வாங்கப்படும் காய்களில் கத்தரிக்காயும் ஒன்று. இது திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வருகிறது. கடந்த ஒரு வாரமாக கத்தரிக்காய் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கத்தரிக்காய் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் கிலோரூ.20-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், நேற்றுகிலோ ரூ.10 ஆக சரிந்துள்ளது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், சைதாப்பேட்டை சந்தை, அரும்பாக்கம் சந்தை, பெரம்பூர் சந்தை போன்ற சில்லறை விற்பனைசந்தைகளில் கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டு வருகிறது.
மற்ற காய்கறிகளான பெரிய வெங்காயம் ரூ.44, முருங்கைக்காய் ரூ.40, தக்காளி ரூ.33, பீன்ஸ், சாம்பார் வெங்காயம் கிலோவுக்கு தலா ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, கேரட் ரூ.25, அவரைக்காய், நூக்கல் தலா ரூ.20,பீட்ரூட், பாகற்காய், பச்சை மிளகாய் தலா ரூ.15,முட்டைகோஸ், முள்ளங்கி, புடலங்காய், வெண்டைக்காய் தலா ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.