சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.6,720-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.53,760-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.57,400-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.92-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.92,000 ஆக உள்ளது. விலை உயர்வால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் பண்டிகைக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைரவியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, ‘‘ சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால் தங்கம் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.