EBM News Tamil
Leading News Portal in Tamil

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா | Tamilnad Mercantile Bank MD Krishnan resigns


சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ பொறுப்பில் இருந்து எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது விலகல் கடிதத்தை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும் முறைப்படி தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து எஸ்.கிருஷ்ணன் விலகி உள்ளதாக அவரது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தகவல்.

கடந்த 13 மாதங்களுக்கு முன்னர் இந்தப் பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டார். கடந்த ஜனவரியில் சிறிய வங்கிகளில் சிறந்த வங்கியாகத் தேர்வு செய்யப்பட்டு விருதையும் பெற்றிருந்தது.

அண்மையில் வாடகை கார் ஓட்டுநரின் டிஎம்பி வங்கிக் கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி அனுப்பப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.