EBM News Tamil
Leading News Portal in Tamil

பொதுத் துறை வங்கிகளில் கடன், டெபாசிட் வளர்ச்சியில் மகாராஷ்டிரா வங்கி முதலிடம் | Bank of Maharashtra tops in loan, deposit growth


சென்னை: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சியில் சுமார் 25 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, பொதுத்துறை வங்கிகளில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளின் காலாண்டு புள்ளிவிவரங்களின்படி பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் மொத்த உள்நாட்டுக் கடன்கள் 24.98 சதவீத வளர்ச்சியுடன் ஜூன் 2023 இறுதியில் ரூ.1,75,676 கோடியாக உள்ளது. அதைத் தொடர்ந்து யூகோ வங்கி 20.70% வளர்ச்சியுடன் 2-ம் இடத்திலும், பாங்க் ஆஃப் பரோடா 16.80% வளர்ச்சியுடன் 3-ம் இடத்திலும், 16.21% வளர்ச்சியுடன் ஐஓபி 4-ம் இடத்திலும், எஸ்பிஐ 15.08% வளர்ச்சியுடன் 5-ம் இடத்திலும் உள்ளன.

சில்லறை-வேளாண்மை-எம்எஸ்எம்இ (ரேம்) கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா அதிகபட்சமாக 25.44 சதவீத வளர்ச்சியையும், பஞ்சாப்