EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆக.17, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைவு | Gold price low Rs.312 per Sovereign


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 17) சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.5,456-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,408-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 0.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.75,700 ஆக இருக்கிறது.