EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆக.18 வரை ‘கோ ஃபர்ஸ்ட்’ விமான சேவைகள் ரத்து | Go First flight services cancelled till August 18


மும்பை: இம்மாதம் 18-ம் தேதி வரை கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் விமான சேவையை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. செயல்பாட்டு காரணங்களால் விமான சேவை ரத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தனியார் விமான சேவை நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த மே மாதம் தங்கள் நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறி, தாமாக முன்வந்து தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்தது. இந்தச் சூழலில் வரும் 18-ம் தேதி வரையில் விமான சேவையை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயல்பாட்டு காரணங்களால் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த கோ ஃபர்ஸ்ட் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம். எங்கள் செயல்பாட்டை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் மூலம் விரைவில் முன்பதிவுகள் தொடங்க இயலும் என தெரிவித்துக் கொள்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.