EBM News Tamil
Leading News Portal in Tamil

தங்கம் விலை மீண்டும் ரூ.57 ஆயிரத்தை தொட்டது | Gold price was explained


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.57 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.58,280 ஆக இருந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.57 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து, ரூ.7,125 ஆக இருந்தது. 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.62,184 ஆக இருந்தது.

இதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.100 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1 லட்சமாகவும் உள்ளது.