EBM News Tamil
Leading News Portal in Tamil

“உள்கட்டமைப்புத் தொழில் துறையினர் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும்” – நாராயண மூர்த்தி | Infrastructure sector should work 3 shifts Narayana Murthy


பெங்களூரு: இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் உள்கட்டமைப்புத் தொழில் துறையினர் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும் என தற்போது அவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் ஜெரோதா இணை நிறுவனம் நிகில் காமத் உடனான உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “உள்கட்டமைப்பு தொழில் துறையில் ஈடுபட்டு வரும் நபர்கள் 3 ஷிப்ட் வேலை பார்க்க வேண்டும். காலை 11 மணிக்கு வந்து மாலை 5 மணிக்கு திரும்பும் ஒரே ஒரு ஷிப்ட் மட்டும் அவர்கள் வேலை பார்க்க கூடாது. பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் அதை தான் நான் பார்க்கிறேன்.

ஆனால், பிற நாடுகளில் இரண்டு ஷிப்ட்டில் வேலை பார்க்கிறார்கள். அதை நான் பார்த்துள்ளேன். அது போல இங்கு மூன்று ஷிப்ட் இல்லை என்றாலும் இரண்டு ஷிப்டுக்கு என்னால் உறுதி அளிக்க முடியும். மற்ற நாடுகளை காட்டிலும் நாம் முன்னேற விரும்புகிறோம். அது நடக்க வேண்டும் என்றால் உள்கட்டமைப்புத் தொழில் துறையினர் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும். அந்த வேலை நடக்க ஊழியர்களின் தேவை அறிந்து, அதை நிறைவேற்ற வேண்டும். அது நடந்தால் சந்தேகமே இல்லாமல் சீனாவை இந்தியா முந்தும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.