EBM News Tamil
Leading News Portal in Tamil

மத்திய அரசின் மானிய செலவு பட்ஜெட் ஒதுக்கீட்டை விட ரூ.50,000 கோடி அதிகரிக்கும்: மத்திய அரசு தகவல் | 50,000 crore rise in its subsidy bill for FY24


புதுடெல்லி: மத்திய அரசு பல்வேறு திட்டங் களுக்கு மானியம் வழங்கி வரு கிறது. அந்த வகையில் நடப்பு 2023-24 நிதியாண்டுக்கான பட் ஜெட்டில் இதற்காக ரூ.4.03 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால், உரம், சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பாதுகாப்பு திட்டங்களுக்கான மானியம் திட்டமிட்டதைவிட அதிக ரித்துள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டுக்கான மானியச் செலவு ரூ.50 ஆயிரம் கோடி அதிகரித்து, ரூ.4.53 லட்சம் கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், கடந்த நிதியாண்டின் மானியச் செலவான ரூ.5.62 லட்சம் கோடியைவிட இந்தத் தொகை குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டில் உர மானியத்துக்காக ரூ.1.75 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் விலை உயர்ந்துள்ளதால் கூடுதலாக ரூ.25 ஆயிரம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.300 மானி யம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததால், இதற்காக கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடிதேவைப்படும். உணவு மானியத்துக்காக ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால், வேளாண் விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு மற்றும் இலவச உணவு தானிய திட்டம் நீட்டிப்பு ஆகிய காரணங்களால் கூடுதலாக ரூ.15 ஆயிரம் கோடி தேவைப்படும் என மதிப் பிடப்பட்டுள்ளது.