மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 610 புள்ளிகள் (0.92 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 65,508 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 192 புள்ளிகள் (0.98 சதவீதம்) வீழ்ந்து 19,523 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கி, பின் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 0.04 புள்ளிகள் உயர்வடைந்து 66,118.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.50 புள்ளிகள் உயர்ந்து 19,734.95 ஆக இருந்தது.