ஐபோன் 15 சீரிஸ் இந்தியாவில் விற்பனை: அதிகாலை 4 மணி முதல் வரிசையில் நின்ற ஆப்பிள் ஆர்வலர்கள் | iPhone 15 series on sale in India Apple users queuing up since 4 am
புதுடெல்லி: ஐபோன் 15 சீரிஸ் போன்கள் இந்தியா உட்பட உலக நாடுகளில் இன்று (செப்.22) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதற்கான பணிகளை கவனித்து வருகிறது. ஐபோன் 15 சீரிஸ் போன்களை வாங்க அதிகாலை 4 மணி முதல் ஆப்பிள் சாதன ஆர்வலர்கள், தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள இரண்டு ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி வருகின்றனர்.
டெல்லியில் காலை 8 மணி அளவில் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டது. அந்த ஸ்டோரில் உள்ள ஊழியர்கள் பகுதி பகுதியாக பயனார்களிடத்தில் போனை விற்பனை செய்து வருகின்றனர். டெல்லி மற்றும் மும்பையில் ஆப்பிள் ஸ்டோர் நிறுவப்பட்ட பிறகு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஐபோன் சீரிஸாக ஐபோன் 15 அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 15, ஐபோன் 15+, ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை ஐபோன் 15 சீரிஸில் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதன் முன்பதிவு தொடங்கியது. டெல்லியில் ஆப்பிள் ஸ்டோர் அமைந்துள்ள மாலுக்கு வெளியில் வரை நீண்டுள்ள வரிசையில் ஆப்பிள் ஆர்வலர்கள் காத்திருந்து போனை வாங்கி வருகின்றனர்.
இந்தியாவில் ஐபோன் 15 விலை
- ஐபோன் 15 (128 ஜிபி): ரூ 79,900
- ஐபோன் 15 (256 ஜிபி): ரூ 89,900
- ஐபோன் 15 (512 ஜிபி): ரூ 1,09,900
இந்தியாவில் ஐபோன் 15 பிளஸ் விலை
- ஐபோன் 15 பிளஸ் (128 ஜிபி): ரூ 89,900
- ஐபோன் 15 பிளஸ் (256 ஜிபி): ரூ 99,900
- ஐபோன் 15 பிளஸ் (512 ஜிபி): ரூ 1,19,900
இந்தியாவில் ஐபோன் 15 புரோ விலை
- ஐபோன் 15 புரோ (128 ஜிபி): ரூ. 1,34,900
- ஐபோன் 15 புரோ (256 ஜிபி): ரூ.1,44,900
- ஐபோன் 15 புரோ (512 ஜிபி): ரூ. 1,64,900
- ஐபோன் 15 புரோ (1 டிபி): ரூ. 1,84,900
இந்தியாவில் ஐபோன் 15 புரோ மேக்ஸ் விலை
- ஐபோன் 15 புரோ மேக்ஸ் (256 ஜிபி): ரூ 1,59,900
- ஐபோன் 15 புரோ மேக்ஸ் (512 ஜிபி): ரூ 1,79,900
- ஐபோன் 15 புரோ மேக்ஸ் (1 டிபி): ரூ. 1,99,900
17 மணி நேரம் காத்திருந்து இந்தியாவில் முதல் ஐபோன் 15 போனை வாங்கிய நபர்: “நான் நேற்று மாலை 3 மணியிலிருந்து இங்கு தான் உள்ளேன். வரிசையில் சுமார் 17 மணி நேரம் காத்திருந்து இந்திய ஆப்பிள் ஸ்டோரில் முதல் ஐபோன் 15 மாடலை வாங்கியுள்ளேன். இதற்காக அகமதாபாத் நகரில் இருந்து நான் வந்துள்ளேன்.
ஐபோன் 15 புரோ மாடல் போனை வாங்கியதில் மகிழ்ச்சி. ஆப்பிள் ஸ்டோர் திறப்பின் போதும் நான் வந்திருந்தேன். அப்போது ஆப்பிள் சிஇஓ டிம் குக்கை சந்தித்தேன்” என மும்பை ஆப்பிள் ஸ்டோரில் முதல் ஐபோன் 15 மாடலை வாங்கியவர் தெரிவித்துள்ளார்.
#WATCH | A customer outside the Apple store at Mumbai’s BKC says, “I have been here since 3 p.m. yesterday. I waited in the queue for 17 hours to get the first iPhone at India’s first Apple store. I have come from Ahmedabad…”
Another customer, Vivek from Bengaluru says, “…I… https://t.co/0deAz5JkCH pic.twitter.com/YE6m5cufC2