Ultimate magazine theme for WordPress.

பேஸ்புக் – ஜியோ கூட்டு முயற்சியால் டிஜிட்டல் சேவையில் மிகப்பெரிய தேசமாக இந்தியா வளரும் – முகேஷ் அம்பானி

ஜியோவின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக பேஸ்புக் உருவெடுத்துள்ளதகாவும், இந்த கூட்டு முயற்சியால் இந்தியா டிஜிட்டல் சேவையில் மிகப்பெரிய தேசமாக மிளிரும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோவின் 9.99 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவ்ர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனம் சார்பில் பேஸ்புக்கை நீண்டகால பங்குதாரராக வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவில் அனைவரும் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் துறை வளர்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் உடன் இணைந்து செயல்படுவோம்.

இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்போம். உலக அளவில் இந்தியா டிஜிட்டல் சேவையில் முன்னணியில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜியோவின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக பேஸ்புக் உருவெடுத்துள்ளதகாவும், இந்த கூட்டு முயற்சியால் இந்தியா டிஜிட்டல் சேவையில் மிகப்பெரிய தேசமாக மிளிரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.