Ultimate magazine theme for WordPress.

Fact Check: ஜன்தன் கணக்கில் அரசு செலுத்திய பணத்தை எடுக்கவில்லை என்றால் சிக்கலா?

பிரதமர் ஜன்தன் கணக்கில் கொரோனா நிவாரணமாக மத்திய அரசு செலுத்திய பணத்தை, எடுக்கவில்லை என்றால் அரசு அதனை திரும்பப் பெறும் என்ற தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

பிரதான் மந்திரி ஜன்தன் வங்கிக்கணக்கில் கொரோனா நிவாரணமாக மத்திய அரசு ரூ.500 செலுத்தியது. இந்த தொகையை எடுப்பதற்காக சில நாட்களாக வங்கிகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

பணத்தை உடனே எடுக்கவில்லை என்றால், அரசு அந்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் என்ற தகவல் பரவியதும் கூட்டம் கூடியதற்கு ஒரு காரணமாகும்.

இந்த நிலையில், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மேற்கண்ட செய்தியை மறுத்துள்ளது. ஜன்தன் கணக்கில் உள்ள பணம் திரும்ப எடுத்துக்கொள்ளப்படும் என்ற தகவல் பொய்யான வதந்தி என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.