EBM News Tamil
Leading News Portal in Tamil

மனித உரிமை கவுன்சிலை புறக்கணித்தது அமெரிக்கா

ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள் ளது.
இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே கூறியதாவது:
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் நடவடிக்கைகள் எங்கள் நாட்டுக்குப் பிடிக்கவில்லை. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் வெட்கமில்லாத கபட நாடகம் கண்டிக்கத்தக்கது.
தவறு செய்பவர்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் தவறே செய்யாத நாடுகளைப் பார்த்து கண்டனம் செய்வதும் கண்டிக்கத் தக்கது. இதுபோன்ற கபட நாடக அமைப்புகளிடமிருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில், இஸ்ரேல் மீது முடிவற்ற விரோதத்தைக் கொண்டுள்ளது. மனித உரிமையை மீறுபவர்கள் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
உலகின் மிக மனிதாபிமானமற்ற ஆட்சிகள் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து தப்பித்து வருகின்றன. அதே நேரத்தில் சாதகமான மனித உரிமை ஆவணங்களைக் கொண்ட நாடுகள் பலிகடாவாக்கப்படுகின்றன.
இது தொடர்கதையாக உள்ளது. எந்த வளர்ச்சியும் இல்லாமல் இதே நிலைமை நீடித் தால் நாங்கள் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகி விடுவோம் என்று ஓராண்டுக்கு முன்பு அறிவித்தோம். அதை இப்போது செய்துள் ளோம்.
இவ்வாறு நாங்கள் செய்துள்ளதால் மனித உரிமை கடமைகளில் இருந்து நாங்கள் பின்வாங்குவதாக அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது. கபட நாடகம் நடத்தும் அமைப்பின் பகுதியாக நாங்கள் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அங்கிருந்து வெளியேறுகிறோம். இவ்வாறு நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.