EBM News Tamil
Leading News Portal in Tamil

கேட்ஜெட் புரட்சிக்கு வித்திடும் Humane நிறுவனத்தின் AI Pin: சிறப்பு அம்சங்கள் | Humane s AI Pin sparks gadget revolution specifications features


சான் பிரான்சிஸ்கோ: டிஸ்பிளே இல்லாத ஸ்மார்ட்போன் என Humane நிறுவனத்தின் AI Pin கேட்ஜெட்டை வர்ணிக்கலாம். இதன் மூலம் மெசேஜ் அனுப்ப, தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள, போட்டோ எடுக்க என ஸ்மார்ட்போன்களில் மேற்கொள்ளும் அனைத்து அம்சங்களையும் அக்சஸ் செய்யலாம். இதில் ப்ரொஜெக்டர் உள்ளது. அது தான் இதன் திரை.

ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது இதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபடுகிறது. சட்டையில் எளிதாக மாட்டிக் கொள்ளும் வகையில் செவ்வக வடிவில் இது உள்ளது.

இந்த சாதனத்தை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இயங்கும் Humane எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதுதான் இந்நிறுவனம் வெளியிடும் முதல் சாதனம். ஓபன் ஏஐ, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் இதற்கு உதவியுள்ளன. இதன் வடிவமைப்பு பணியில் ஆப்பிள் ஐபோன் வடிவமைப்பில் ஈடுபட்ட நபர்களின் பங்களிப்பு இருப்பதாக தகவல். இது விர்ச்சுவல் அசிஸ்டென்ட் ஆகவும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்ஜிபிடி மற்றும் பிங்க் போன்றவற்றின் சப்போர்ட்டும் இதில் உள்ளது.

AI Pin ஹைலைட்ஸ்: Cosmos எனும் இயங்குதளத்தில் இந்த சாதனம் இயங்குகிறது. வழக்கமான போன்களில் இருந்து இது மாறுபடுகிறது. அதனால் சில செயலிகள் இயங்குவதில் சிக்கல் இருக்கும் என தெரிகிறது. குவால்கம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸரை கொண்டுள்ளது. மோனோகுரோமேட்டிக் இமேஜை இதன் ப்ரொஜெக்டர் காண்பிக்கும். வாய்ஸ் கமெண்ட் மற்றும் சைகை மூலம் இந்த சாதனத்தை பயன்படுத்தலாம். விர்ச்சுவல் அசிஸ்டென்ட் மூலம் மெசேஜ்களை கம்போஸ் செய்யலாம். இதில் உள்ள கேமரா உணவுகளை ஸ்கேன் செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்து குறித்த தகவலை பெறலாம்.

இது அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் உலக நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.58,000 என தெரிகிறது.