EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் சாம்சங் கேலக்சி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | samsung launches galaxy a16 5g smartphone in india price features


Last Updated : 18 Oct, 2024 02:56 PM

Published : 18 Oct 2024 02:56 PM
Last Updated : 18 Oct 2024 02:56 PM

சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘ஏ’ வரிசையில் ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. ஆறு இயங்குதள அப்டேட் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்டை இந்த போனில் வழங்குவதாக சாம்சங் உறுதி அளித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • ஆண்ட்ராய்டு 20 வரை இந்த போனை அப்டேட் செய்து கொள்ளலாம் என சாம்சங் தெரிவித்துள்ளது
  • 50+5+2 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,000mAh பேட்டரி
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.18,999 முதல் ஆரம்பமாகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!