EBM News Tamil
Leading News Portal in Tamil

20.5 லட்சம் உணவுப் பொட்டலங்களை பாதிக்கப்பட்டோருக்கு விநியோகித்துள்ள ரயில்வே…!

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்திய ரயில்வே 20.5 லட்சம் உணவு பொட்டலங்களை விநியோகித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ள்ளது. இதனால் சாதாரண மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர்.

அதேபோல் ரயில்வேத்துறையும், ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றியமைப்பது, மாஸ்க் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு ஈடுபட்டு வருகிறது. அதேபோல், உணவின்றி பாதிக்கப்பட்டு மக்களுக்கு உணவு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் தென்மத்திய ரயில்வே மண்டலங்களில் உள்ள புதுதில்லி, பெங்களூர், மத்திய மும்பை, அகமதாபாத், பாட்னா, கயா, ராஞ்சி, விஜயவாடா, காட்பாடி திருச்சி, தன்பத், விசாகப்பட்டினம், செங்கல்பட்டு, பூனா உள்ளிட்ட இடங்களில் உள்ள இந்திய ரயில்வேயின் உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (IRCTC) சமையல் கூடங்கள், ரயில்வே காவல் படை, இதர அரசுத் துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு 20 லட்சம் உணவுப் பொட்டலங்கள், ஏப்ரல் 20-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளன.

மார்ச் 28-ம் தேதி 74 இடங்களில் இருந்த 5419 நபர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கியதில் இருந்து இந்தப் பணி தொடங்கியது. தற்போது அந்த எண்ணிக்கையானது அதிகரித்து 300 இடங்களில் தினமும் 50,000 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.