EBM News Tamil
Leading News Portal in Tamil

குறைந்த வேகமும், விகிதமும்: கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு எந்த அளவில் கைகொடுத்திருக்கிறது…?

ஊரடங்கு அமலாகும் முன் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் மூன்று நாட்களாக இருந்த நிலையில், தற்போது இரட்டிப்பாகும் வேகம் 6 நாட்களாக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 14000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 14 சதவிதமாகவும், உயிரிழந்தோர் சதவிதம் 3.38 ஆகவும் இருக்கிறது.
இந்தியாவில் ஊரடங்கிற்கு ஒரு வாரத்திற்கு முன் 125-ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 25-ஆம் தேதி 492-ஆக இருந்தது.

மார்ச் 25-ஆம் தேதி தொடங்கிய நாடு தழுவிய ஊரடங்கின் முதல் வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் தற்போது 6 நாட்களாக குறைந்துள்ளது.

ஊரடங்கு அமலாகும் முன்னர் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் வெறும் மூன்று நாட்களாக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இப்போது இரட்டிப்பாகும் விகிதம் குறைந்துள்ளது. அதாவது ஊரங்கிற்கு முன்னதாக நாளொன்றிக்கு சாராசரியாக கொரோனா தொற்று வளர்ச்சி விகிதம் நாளொன்றிக்கு 21.6 சதவீதமாக இருந்தது, தற்போது 6 சதவீதம் குறைந்து, நாளொன்றுக்கு வளர்ச்சி விகிதகம் 15-16 சதவிகதமாக உள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு மார்ச் 28-ஆம் இந்தியாவில் 987 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அன்றிலிருந்து முதல் பத்து நாட்களில் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு எண்ணிக்கை இரட்டிப்பானது.அதாவது, மார்ச் 28-ஆம் தேதி 987-ஆக இருந்த எண்ணிக்கை ஏப்ரல் 6-ஆம் தேதி 4778-ஆக அதிகரித்தது. அடுத்த ஒரு வாரத்தில் நான்கு முதல் ஐந்து நாட்களில் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பானது. அதாவது ஏப்ரல் 7 முதல் 13 வரையிலான ஒரு வார காலகட்டத்தில் 5,765 பேர் புதிதாக பதிக்கப்பட்டனர். ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பின் தற்போது ஐந்து முதல் ஆறு நாட்கள் கால இடைவெளியில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகின்றன.

தற்போது, ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்போடு ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் வளர்ச்சி விகிதம் 40 சதவிகிதம் வரை குறைவாக இருந்தாலும், பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது.