வெளிநாடுகளில் கொரோனாவுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 25 இந்தியர்கள் உயிரிழப்பு
ஐரோப்பியா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா, ஈரான், ஸ்வீடன், எகிப்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசித்த 25 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 11 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ஒருவர், ஸ்வீடன் நாட்டில் உயிரிழந்துள்ளார்.