‘’பாபநாசம் 2“வில் நடிப்பீங்களா? கமலிடம் கேளுங்கள்… நடிகை மீனா பதில் !
மோகன் லால், மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் திரிஷ்யம். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மிகப்பெரிய வெற்றி த்ரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இதில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் கௌதமியின் நடிப்பு குறித்து சில நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்தபோதிலும் கமலின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.
பேச்சுவார்த்தை இந்நிலையில், பாபநாசம் 2 விரைவில் உருவாக உள்ளது. இதில் கமல்ஹாசன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கௌதமி , இரண்டாம் பாகத்தில் இல்லை என்றும், அவர் நடித்த கதாபாத்திரத்தில் மீனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.