EBM News Tamil
Leading News Portal in Tamil

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்டதால் க.காதலியின் மாமியாரை கொன்றேன் கள்ளக்காதலன் திடுக் வாக்குமூலம்

நாகை: உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்டதால் கள்ளக்காதலியின் மாமியாரை அடித்துக் கொலை செய்தேன் என்று கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மானாம்பேட்டை காலனி தெருவை சேர்ந்தவர் விஜயா (55). இவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி காலை விறகு வெட்டுவதற்காக சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றதும் விஜயாவை மருமகள் மதியழகி தேடி சென்றபோது, மானாம்பேட்டை முத்துக்கோனார் புளியங்கூண்டு கொல்லையில் விஜயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இதுபற்றிய புகாரின்பேரில், நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக நேற்று விஜயாவின் 2வது மகன் செந்தில்(28), அவரது மனைவி பரிமளா (23) மற்றும் பரிமளாவின் கள்ளக்காதலன் சின்னமணி(34) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது சின்னமணி அளித்த வாக்குமூலம் வருமாறு:பரிமளாவுக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தோம். ஒருநாள் விறகு வெட்டுவதற்கு வந்த விஜயா, நாங்கள் நெருக்கமாக இருந்ததை பார்த்து விட்டார். அப்போது எங்களை விஜயா திட்டியதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. விஜயா உயிருடன் இருந்தால் ஊருக்குள் சென்று சொல்லி அசிங்கப்படுத்திவிடுவார் என்று பயந்து நானும், பரிமளாவும் சேர்ந்து விஜயாவை கட்டையால் அடித்தோம். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த விஜயா இறந்துவிட்டார். பின்னர் விஜயாவின் சடலத்தை முட்புதரில் வீசினோம். அப்போது தாய் விஜயாவை தேடிவந்த செந்தில் எங்களை பார்த்துவிட்டார்.
செந்திலை பிடித்துவைத்துக்கொண்டு இந்த கொலை பற்றி யாரிடமாவது கூறினால் உன்னையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். இதனால் உயிருக்கு பயந்து யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான். இதன்பிறகு நாங்கள் 3 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டோம். போலீசார் விசாரித்து எங்களை பிடித்துவிட்டனர்.இவ்வாறு சின்னமணி கூறினார்.இதையடுத்து சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி பரிமளா, கள்ளக்காதலன் சின்னமணி மற்றும் கொலையை மறைத்ததாக செந்தில் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.