பலாத்கார புகாரில் கராத்தே வீரர் கைது
புதுடெல்லி: பெண்கள் முன்பாக ஆபாசமாக நடந்து கொண்ட டேக்வாண்டே தற்காப்பு கலை வீரர் இப்போது பாலியல் பலாத்கார புகாரில் கைதாகி உள்ளார். சந்தீப் சவுகான் மீது 30க்கும் மேற்பட்ட மானபங்கம், துரத்தி சென்று கேலி செய்வது, சங்கிலி, கைப்பைகள் பறிப்பு, கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. 38 வயதான இவர் இரு மாதங்களுக்கு முன்பாக பெண்கள் எதிரில் சுய இன்பம் அனுபவித்து ஆபாசமாக நடந்து கொண்டார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த 38 வயது சந்தீப் மீது 27 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார்.
வசந்த் குஞ்ச் பகுதியில் ரங்க்புரி பாஹரியில் தனது வீட்டில் சந்தீப் பாலியல் பலாத்காரம் செய்தார் என புகாரில் கூறியுள்ளார். வீட்டில் தனியாக இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறியுள்ளார். தன் மீது புகார் அளிக்கப்பட்டதை அறிந்த சந்தீப் தலைமறைவானார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண், பழைய குற்றவாளிகளின் புகைப்பட பட்டியலில் இருந்து சந்தீப்பை அடையாளம் காட்டினார். இதையடுத்து, சந்தீப்பை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை போலீசார் பதிந்துள்ளனர்.