EBM News Tamil
Leading News Portal in Tamil

போலீசிடம் இருந்து தப்பிக்க மாணவியின் வயிற்றில் உதைத்து கருவை கலைத்த கொடூரன் கைது

சென்னை: போலீசிடம் இருந்து தப்பிக்க 9ம் வகுப்பு மாணவி வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது ெசய்தனர். சென்னை சிந்தாதிரிப்ேபட்டையை சேர்ந்தவர் அருண் (22). இவர் வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் ெசய்து வருகிறார்.
இவர், அதே பகுதியை சேர்ந்த இந்துமதி (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 9ம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். இருவரும் பல இடங்களில் சுற்றி தனிமையில் இருந்துள்ளனர். இதனால் இந்துமதி கர்ப்பமானார். இதற்கிடையே இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், வீட்டிற்கு தெரியாமல் இருவரும் அவ்வப்போது வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அருண் கருவை கலைக்க சொல்லி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், கருவை கலைக்க சொல்லி பலமுறை வலியுறுத்தி உள்ளார். அதற்கு இந்துமதி மறுத்துள்ளார்.
இந்நிலையில், அருண் நேற்று முன்தினம் குடி போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் கருகலைப்பு குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் போதையில் இருந்த அருண், இந்துமதியை கர்ப்பிணி என்றும் கூட பாராமல் வயிற்றில் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் வலிதாங்க முடியாமல் இந்துமதி அலறியுள்ளார். உடனே, அருகில் இருந்த பொதுமக்கள் இந்துமதியை அருணிடம் இருந்து மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இந்துமதியை சோதனை செய்த மருத்துவர்கள் இந்துமதி கர்ப்பிணியாக இருந்ததை தெரிவித்தனர்.
அருண் எட்டி உதைத்ததால் கரு கலைந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து இந்துமதி பெற்றோர் சம்பவம் குறித்து எழும்பூர் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் சசி வழக்கு பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கி அடித்து கருவை கலைத்த அருணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Tags: மாணவிகருவை கலைத்த கொடூரன் கைது