அமெரிக்க அமைச்சருடன் வடகொரிய தலைவர் சந்திப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர்.
இந்நிலையில், வடகொரிய உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சோல் நியூயார்க் சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் போம்பியோவை சந்தித்தார். அப்போது, ட்ரம்ப்-கிம் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவின் உயர் அதிகாரி ஒருவர் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று வடகொரியா சென்றார். தலைநகர் பியாங்யாங்கில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்துப் பேசினார். அப்போது, தங்கள் நாட்டுக்கு வருமாறு கிம்முக்கு அழைப்பு விடுத்தார். – பிடிஐ