EBM News Tamil
Leading News Portal in Tamil

டாடா மோட்டார்ஸ் நஷ்டம் ரூ.1,862 கோடி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நஷ்டம் ரூ.1,862 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,199 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது. காலாண்டு அடிப்படையில் நஷ்டம் இருந்தாலும் செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.59,818 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.67,081 கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
பயணிகள் வாகன விற்பனை 59 சதவீதம் அளவுக்கு உயர்ந்து 1.76 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறது. அதே சமயத்தில் ஜே.எல்.ஆர் பிரிவின் வருமானம் 6.7 சதவீதம் சரிந்திருக்கிறது.
உள்நாட்டு வாகன விற்பனை யில் சந்தை மதிப்பை டாடா மோட்டார்ஸ் உயர்த்திக் கொண்டு வருகிறது.ஜே.எல்.ஆர்.பிரிவை பொறுத்தவரை பல சவால்களை நாங்கள் கையாளுகிறோம். சீனாவின் வரிவிகிதம் தவிர இங்கிலாந்து ஐரோப்பாவில் டீசல் குறித்த பிரச்சினைகளால் இந்த பிரிவின் வருமான குறைந்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.27 சதவீதம் உயர்ந்து ரூ.264.10 ரூபாயில் முடிவடைந்தது.
டாடா மோட்டார்ஸின் தாய்லாந்து ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலையை தொடர்ந்து செயல் படுத்துவது லாபகரமானதாக இல்லாததால் இந்த முடிவை டாடா மோட்டார்ஸ் எடுத்துள் ளது. இருப்பினும் இங்கு நிறுவனத் தயாரிப்புகளுக்கான தேவையைப் பொறுத்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
நிறுவனத்தை சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தாய்லாந்து ஆலை செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தாய்லாந்தில் நீண்ட கால அடிப் படையிலான அணுகுமுறை குறித்து பரிசீலனை செய்யப் படுவதாக டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இப்போது நிறுவன செயல்பாடு நீண்ட கால அடிப்படையில் ஆதாயம் தருவதாக இல்லை. இதன்காரணமாக நடப்பு நிதி ஆண்டில் இந்த ஆலை உற்பத்தியை நிறுத்த முடிவு செய்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் தாய்லாந்து மக்களின் தேவைக்கேற்ற வகை யிலான வாகனங்களை இறக் குமதி செய்து அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த ஆலையில் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 170 கோடி. இதனால் இந்த ஆலையின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்ததாக குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி பி. பாலாஜி தெரிவித்துள்ளார்.