ஆந்திராவில் கியா மோட்டார்ஸ் ஆலை
தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா தனது கார் ஆலையை ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைக்க இருக்கிறது. இந்தியாவில் இந்த நிறுவனம் அமைக்கும் முதல் ஆலை இதுவாகும். 535 ஏக்கரில் அமைக்கப்படவுள்ள இந்த ஆலையின் மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த ஆலை செயல்பட ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் எஸ்யுவி ரக கார்களை மட்டும் இந்த ஆலையில் தயாரிக்க கியா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.