EBM News Tamil
Leading News Portal in Tamil

உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை..

கியா நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி கார் உல்லாச கப்பல்களின் சொகுசு வசதிக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உருமாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், இந்தியாவில் தால் கடம் பதித்ததை அடுத்து இரண்டாம் மாடலாக கியா கார்னிவல் எம்பிவி காரை அறிமுகம் செய்தது. இந்த காரை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி காருக்கு போட்டியாக அது களமிறக்கியது.

லக்சூரி அம்சத்தை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு அம்சங்களை இந்த காரில் கியா சேர்த்துள்ளது.

இந்த அம்சத்தில் திருப்தி கொள்ளாத தொழிலதிபர்களைக் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கவர்கின்ற வகையில் டிசி2 நிறுவனம் கார்னிவலை மாடிஃபை செய்துள்ளது. ஏற்கனவே, இந்த காரில் காணப்படும் சொகுசு அம்சங்கள் கார்னிவலை கார்தானா அல்லது உல்லாச கப்பலா என்ற கேள்வியை எழுப்புமளவிற்கு தொழில்நுட்பங்களும், லக்சூரி வசதிகளும் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

இதைக் காட்டிலும் ஏராளமான வசதிகளை கார்னிவல் எம்பிவி காரில் டிசி2 புகுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். டிசி2 நிறுவனம் இந்தியாவில் இயங்கி வரும் பழமையான வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், முன்பாக டிசி என்ற பெயரில் இயங்கி வந்தது. சமீபத்தில்தான் டிசி2 என்ற பெயரில் அதன் புதிய அத்தியாத்தைத் தொடங்கியது.

இந்த புதிய பெயருடன் பல்வேறு புத்தம் புதிய மாடிஃபிகேஷன் கொள்கைகளையும் அது களமிறக்கியிருக்கின்றது. அதன்படி, சமீபத்தில் பிரபல இந்தி திரைப்பட நடிகை மாதுரி திக்சித்-இன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி-கிளாஸ் காருக்கு இணையாக மாடிஃபை செய்திருந்தது. இதுபோன்ற பல கார்களை அதிலும் மிக முக்கியமாக வழக்கமான பட்ஜெட் கார்களைக் கூட இந்நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களுக்கு இணையாக மாடிஃபை செய்திருக்கின்றது.