இலவச கார் வழங்க சென்னை தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால் மகிழ்வித்த ரெவ்..
கொரோனாவிற்கு எதிரான போரில் முக்கிய பங்கினை வகித்து ஹீரோக்களாக மாறியிருக்கும் சுகாதார பணியாளர்களை மகிழ்விக்கும் விதமாக ரெவ் நிறுவனம் இலவச கார்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கண்ணுக்கே புலப்படாத ஓர் வரஸ் மனித இனத்திற்கே பெரும் சவாலை விடுத்து வருகின்றது. தங்களை சர்வாதிகார நாடுகள் என அலட்டிக் கொண்டவர்கள்கூட தற்போது பெட்டி பாம்பாக முடங்கியிருக்கின்றனர். ஏனென்றால், அவர்களுக்கு முன்பு எதிரியாக வந்திருப்பவன் அவ்வளவு எளிதில் மனித கண்களுக்கு அகப்படாத ஓர் நுண்ணிய வகை வைரஸ் ஆகும். இதைக் கண்டுதான் உலக நாடுகள் பல தற்போது நடு நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
அதேசமயம், இந்த கண்களுக்கு புலப்படாத வைரசுக்கு எதிரான போராட்டத்தையும் அவை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கொரோனா எனப்படும் ஒற்றை வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டிருக்கின்றன என்றுகூட கூறலாம். அந்தளவிற்கு பல நாடுகள் கூட்டு சேர்ந்து கோரோனாவை ஒழித்துக்கட்டும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன.
இந்த போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் அதன் சுதாரத்துறையே மேம்படுத்துவது மிக முக்கிய தேவையாக உள்ளது. ஆகையால், முன்பு பாதுகாப்பு துறைக்கு அதிக நிதியை ஒதுக்கிய நாடுகள்கூட இனி வரும் காலங்களில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு அதிக நிதியை ஒதுக்க திட்டமிட்டிருக்கின்றன. அதேசமயம், பெருமளவிலான தொகையை தற்போதைய கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கும் ஒதுக்கி வருக்கின்றன.
ஏனென்றால் கொரோனா வைரஸ் அதன் தீர தன்மை மூலம் புதிய பாடத்தை மனிதர்களுக்கு கற்றுக் புகட்டியுள்ளது. எனவே, தற்போது சுகாதாரம் மற்றும் மருத்தும் சார்ந்து பணி செய்யும் அனைவரும் நிஜ வாழ்க்கை ஹீரோக்களாக மாறியிருக்கின்றனர். தொடர்ந்து, அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உதவிகளை வாரி வழங்கி ஆரம்பித்திருக்கின்றன.