சீன பொருட்கள் மீது கூடுதல் வரி : டிரம்ப் அதிரடி
வாஷிங்டன், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீத வரியை உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடிஉத்தரவு பிறப்பித்துள்ளார்.
சீனா-அமெரிக்கா இடையே தற்போது வர்த்தக பனிப்போர் துவங்கியுள்ளது. சீனாவின் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளால் தனது நாட்டின் பொருளாதாரம் பாதிப்பதாக அமெரிக்கா கருதுகிறது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 1,300 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி உயர்த்தி அதிரடி உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் இந்த உத்தரவுக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 106 பொருட்களுக்கு 25 சதவீத வரியை உயர்த்தி சீன அதிபர் ஜின்பிங் நிர்வாகம் உத்தரவிட்டது.. பிரச்னை பெரிதாக வெடிக்கவே, இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா தனது வரி விதிப்பில் உறுதியாக இருந்ததால் சீன இறக்குபதி பொருட்கள் மீது 50 பில்லியன் டாலர் ( ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி) வரி விதிக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இந்த வரி விதிப்பு முடிவு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.