Ultimate magazine theme for WordPress.

குழந்தை சுட்டு தாய் படுகாயம்: பொம்மை என எண்ணி துப்பாக்கியால் நடந்த விபரீதம்

புல்லட் பொருத்தப்பட்ட துப்பாக்கியை பொம்மைத் துப்பாக்கியென நினைத்து கொடுத்த தாயை சுட்டுப்பார்த்த குழந்தையால் தற்போது மரணவாசலில் ஒரு பெண்மணி போராடிக்கொண்டிருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் ஆரம்பாக் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ரம்பாக் அருகே கானக்கோல் கிராமத்தில், காகோலி ஜனா என்ற பெண் தனது வீட்டுக்கு வெளியே இருந்த ஒரு தோட்டத்தில் நடந்து வந்துகொண்டிருந்தார்.
அப்போது அங்கு கீழே இருந்த துப்பாக்கியை உண்மையான துப்பாக்கி என்றறியாமல் தனது குழந்தைக்கு விளையாடக் கொடுக்கலாம் என்று வீட்டுக்குள் அதை எடுத்து வந்து குழந்தையிடம் கொடுத்துள்ளார்.
அவரது மகளும் பொம்மைத் துப்பாக்கி என நினைத்து விளையாடத் தொடங்கினார். அப்போது துப்பாக்கியை இயக்கி தனது தாயை விளையாட்டாக சுட்டுப் பார்த்துள்ளார். இதில் தாய்க்கு குண்டடிப்பட்டுவிட்டது.
காயம்பட்ட குழந்தையின் தாய் ஆரம்பாக் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனினும் தொடர்ந்து அப்பெண் கவலைக்கிடமான நிலையில் அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.
தற்போது, காகோலி ஜனாவின் மகளை விசாரணைக்காக போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தின்போது, காகோலி ஜனாவின் மகள் துப்பாக்கியை அழுத்தியிருக்கிறார். அப்போது எதிர்பாராமல் திடீரென்று வெளியேறிய குண்டு அறையில் அமர்ந்திருந்த தனது தாயின் மீது பாய்ந்துள்ளது. தனது தாயையே துப்பாக்கியால் சுட்ட எதிர்பாராத சம்பவத்தால் அவர் மிகவும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் உள்ளார்.
மேலும் தோட்டத்திற்கு துப்பாக்கி எப்படி வந்தது என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.