EBM News Tamil
Leading News Portal in Tamil

உலக அளவில் 31 லட்சத்தை கடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒன்பதரை லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் 10 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்த நிலையில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஸ்பெயினில் 2 லட்சத்து 32 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்து 822-ஆக உள்ளது. இத்தாலியில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரான்சில் 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 48 ஆயிரத்து 886 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 586 பேர் உயிரிழந்தனர்.

ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ரஷ்யாவில் 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 867 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.