EBM News Tamil
Leading News Portal in Tamil

குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா வரலாம்: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவல்..!

கொரோனாவால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று வராது என உறுதியாக கூறமுடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கும் ஆண்டிபாடி சிகிச்சை முறை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நோயிலிருந்து விடுபட்டவர்கள் சில நாட்களுக்கு பின் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம், அவர்களுக்கு மீண்டும் தொற்று வராது என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இந்த நிலையில் இருந்து உலக சுகாதார அமைப்பு பின்வாங்கியுள்ளது. ஒருமுறை கொரோனா வைரஸ் தாக்கினால் மீண்டும், அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள உலகா சுகாதார அமைப்பு, மருந்து கண்டுபிடிப்பது ஒன்றே இதற்கு முழுமையான தீர்வளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.