EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா அச்சம்: இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு!

கொரோனா பாதிப்பால் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனாவால் 295 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக வரும் 25-ம் தேதி நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தலை இரண்டு மாதங்கள் ஒத்திவைப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலங்கையில் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக மார்ச் 2ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.