EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா: பொருளாதார இழப்பீட்டுக்காக சீனா 130 பில்லியன் டாலர் வழங்கவேண்டும் – நோட்டீஸ் அனுப்பிய ஜெர்மனி

கொரோனா வைரஸைப் பரப்பியதற்காக, தங்களுக்கு 130 பில்லியன் ஐரோப்பிய டாலர்கள் சீனா வழங்க வேண்டும் என்று ஜெர்மனி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் சிதைத்துவருகிறது. சீனாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுவருகின்றன. ஜெர்மனியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. ஏற்கெனவே, அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் கொரோனா பரவலுக்கு சீனா மீது குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்தநிலையில், ஜெர்மனியும் சீனா மீது குற்றம் சாட்டியுள்ளது. ஒருபடி மேலே போய், சீனா இழப்பீடு வழங்கவேண்டும் என்று இழப்பீடு விவரப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சீனா ஜெர்மனிக்கு 130 பில்லியன் ஐரோப்பிய டாலர் வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா எப்படி எங்களுக்கு கடன்பட்டுள்ளது? என்ற தலைப்பில் விவரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுலா வருமான இழப்புக்காக 27 பில்லியன் ஐரோப்பிய டாலரும், ஜெர்மன் திரைப்பட வருவாய் இழப்புக்கா 7.2 பில்லியன் டாலரும், ஜெர்மன் சிறு தொழில்கள் வருவாய் இழப்புக்காக 50 மில்லியன் டாலரும் வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதில், பதிலளித்த சீனா, ‘தேசியவெறி மற்றும் எங்கள் நாட்டின் மீதான வெறுப்பின் காரணமாக ஜெர்மன் இதனைச் செய்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.