EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது: ஹெச்ஐவி வைரஸைக் கண்டுபிடித்த நிபுணர் அதிர்ச்சி தகவல்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் லூக் மான்டேனியர் கூறியுள்ளார்.

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்களில் ஊஹான் நகரை சிதைத்தது. சுமார், சீனாவில் மட்டும் 82,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் மிக அதிக அளவில் பாதித்தனர். அந்த நாடுகளில் சீனாவில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருந்தது. அதேபோல, அமெரிக்காவிலும் ஏழு லட்சம் பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹெச்ஐவி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற மான்டேனியர் ஃபிரெஞ்சுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த வைரஸ் உருவானதாக அவர் கூறியுள்ளார்.

ஹெச்ஐவி வைரஸின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டில் இருப்பதாகக் கூறும் மான்டேனியர் ஊஹானில் உள்ள தேசிய உயிரிகாப்பக ஆய்வகத்தில் நடந்த விபத்தால் கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.