உலகளவில் 22 லட்சத்தை நெருங்கியது கொரோனா தொற்று! சுமார் 1.45 லட்சம் பேர் உயிரிழப்பு
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்தை நெருங்கி உள்ளது.
சீனாவின் ஊஹானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம் பதித்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 34,617 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்து இத்தாலியில் 22,170 பேரும், ஸ்பெயினில் 19,315 பேரும் பிரான்சில் 17,920 பேரும், பிரிட்டனில் 13,729 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92,224-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் 13,430 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 448 பேர் உயிரிழந்துள்ளனர்.