EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உச்சத்தைக் கடந்துவிட்டது… அதிபர் டிரம்ப்!

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உச்சத்தை கடந்துவிட்டது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

உலக அளவில் கொரோனாவால் மிக அதிக அளவில் பாதிப்புகளை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதுவரையில், 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்கு முன்பே மாகாண எல்லைகளை திறக்க திட்டமிட்டுள்ள அதிபர் டிரம்ப், அதற்கான வழிகாட்டு முறைகளை வெளியிடுமாறு மாகாண ஆளுநர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்பின் உச்சத்தை தாங்கள் கடந்துவிட்டதாகவும், அது தொடரும் என்பதே பெரிய முன்னேற்றம் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

சில மாகாண எல்லைகளை இந்த மாதத்திற்குள் மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அமெரிக்கர்கள் அனைவரும் மீண்டும் குழந்தைகளாக மாறுவோம் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.