Ultimate magazine theme for WordPress.

தங்கள் நாட்டு குடிமக்களை அழைத்துச் செல்லாத நாடுகள் மீது நடவடிக்கை: ஐக்கிய அரசு நாடுகள் எச்சரிக்கை

ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து தங்களது குடிமக்களை அழைத்துச் செல்லாத நாடுகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் மிகத் தீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலைத் தடுக்க முடியாமல் திணறிவருகின்றனர். துபாய், கத்தார், ஓமன் உள்ளிட்ட ஐக்கிய அரசு நாடுகளில் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக உலகம் அனைத்தும் விமான சேவையை நிறுத்தியுள்ளன. அதனால், பலரும் வெளிநாடுகளிலேயே சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரபு நாடுகளில் சிக்கியுள்ள தங்கள் நாட்டவர்களை திரும்ப அழைத்துச் செல்வதற்கு முயற்சி செய்யாத நாடுகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க அந்நாடு முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கான ஐக்கிய அரசு நாடுகளின் தூதர் அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா, ‘இதுதொடர்பாக அரபு நாடுகளில் உள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து தூதரங்களுக்கும் கடந்த இரண்டு வாரங்களில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய அரசு நாடுகளின் மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். அதில், கேராளவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்புபவர்களை, அவர்களது நாடுகள் திரும்ப அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். இதற்கு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அந்நாடு முடிவு செய்துள்ளது. தங்கள் நாட்டவர்களை திரும்ப அழைப்பைதை வைத்து அந்த நாடுகளிடையை தொழிலாளர்களுக்கான உறவுகள் குறித்து வரையறைசெய்யப்படும். திரும்ப அழைக்காத நாடுகள் மீது வேலைவாய்ப்புக்காக அரபு நாடுகளுக்கு வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.