EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிமுனையில் இருக்கிறோம்: இத்தாலி அதிபர்

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறும் கட்டத்தில் இருப்பதாக இத்தாலி அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு உரையாற்றிய அவர், இத்தாலியில் பெரும்பாலானோர் தனியாக ஈஸ்டர் கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக உருக்கமாகத் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறும் நிலையில் இருப்பதாகக் கூறியுள்ள அவர், கொரோனாவை முழுமையாக தடுக்கும் மருந்து உருவாக்கப்படும் வரை நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.