EBM News Tamil
Leading News Portal in Tamil

நிதியை நிறுத்துவோம்… உலக சுகாதார அமைப்பிற்கு டிரம்ப் எச்சரிக்கை

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது. நியூயார்க் மாகாணத்தில் மட்டும் கொரோனா வைரஸால் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து பெரும்பான்மையான நிதியைப் பெறுவதாகவும், ஆனால் பல விஷயங்களில் அவர்கள் தவறாகவே பேசியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவே தோன்றுகிறது என்று கூறியுள்ள டிரம்ப், அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாக“ எச்சரித்துள்ளார்.