14 நாட்களில் உருவான.. உலகின் 2வது பிரமாண்ட கொரோனோ பரிசோதனை லேப்.. அபுதாபியில் திறப்பு
ரியாத்: உலகின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அபுதாபியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும்.
கொரோனா வைரஸால் ஐக்கிய அரபு நாடுகளில் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அபுதாபியில் மிகப் பெரிய கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு அங்கு நாளொன்றுக்கு 600 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.
சோதனைக்குள்படுத்தப்படுகிறார்கள். இதனால் வைரஸ் பரவலை தடுக்க மிகப் பெரிய பரிசோதனை கூடத்தை தொடங்க அந்நாட்டு அமைச்சரவை கடந்த 29-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.
இதன்படி, அபுதாபியில் மஸ்தார் நகரத்தில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா சோதனை கூடம் 14 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூடம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை கூடத்தை அபுதாபியின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான பிஜிஐ மற்றும் குரூப் 42 ஆகியன இணைந்து அமைத்துள்ளது. இந்த பரிசோதனை மையம் வளைகுடா நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் உதவும் என்கிறார்கள்.