EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் இதுவரை 145 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 6.8, 7 ஆகப் பதிவாகின. அதன் 132 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
லாம்போக் தீவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அங்கு 80 சதவீத வீடுகள் நில நடுக்கத்தால் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் சாலை, தெருக்களில் முகாமிட்டுள்ளனர். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்துள் ளனர்.
இந்தோனேசிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதுவரை 145-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
லாம்போக் தீவு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட் டுள்ளது. பாலங்கள் இடிந்து விழுந் துள்ளதால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. தொலைத் தொடர்பு சேவைகளும் பாதிக்கப் பட்டுள்ளன.
பாலி தீவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கிருந்த வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.