EBM News Tamil
Leading News Portal in Tamil

சாலை விபத்தை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்: சென்னை இளைஞர்களுக்கு ‘டாக்கா’ சொல்லும் சேதி

கடந்த ஒரு வாரமாக, வங்கதேச தலைநகர் டாக்கா, மாணவர் போராட்டங்களால் நிலைகுலைந்து போய் இருக்கிறது. யாருடைய தூண்டுதலும் இன்றி தானாக நடைபெற்று வரும் இப்போரட்டங் களில் கடந்த இரு தினங்களாக வன்முறை பரவி இருக்கிறது. டாக்கா நகரில் என்னதான் நடக்கிறது? ஏன் இந்தப் போராட்டங்கள்?
கடந்த ஜூலை 29-ம் தேதி டாக் காவில், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, வேகமாக வந்த மற்றொரு பேருந்து மோதியது. இதில், இரு மாணவர் கள் (ஓர் ஆண், ஒரு பெண்) உயிரிழந்தனர். இதையடுத்து, மாணவர்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர்.
‘சாலை பாதுகாப்பு’ விழிப் புணர்வு குறித்த வாசகம் அடங்கிய பதாகைகளைத் தாங்கியபடி, இளம் வயதினர் சாலையில் இறங்கிப் போராடுகின்றனர். மேலும் இளைஞர்களே ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி சான்று களைச் சரி பார்த்தனர். ஒரு வழிச் சாலையில் எதிர் திசையில் வந்த அமைச்சரின் காரை வழி மறித்த னர். மற்றொரு அமைச்சரின் ஓட்டுநருக்கு உரிமமே இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து அமைச்சரிடம் விளக்கம் கேட்டனர்.
“டாக்காவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகமாகி வருகின்றன; சிலர் வாகனங்களை அசுர வேகத்தில் தாறுமாறாக ஓட்டுவதால் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழக்கின்றனர்; இதைத் தடுப்பதற்கான நடவடிக்கை களை உடனடியாக எடுக்க வேண்டும்” என்று அவர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து டாக்கா மாநகர காவல் துறை ஆணையர் அசாதுசாமான் மியா கூறும்போது, “உள்நாட்டில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் மக்கள், அயல் நாடுகளுக்குச் சென்றால் மட்டும் முறையாக விதிகளை மதித்து நடந்து கொள்கிறார்கள்; இங்கேயும் ஏன் அப்படி நடந்து கொள்ளக் கூடாது?” என்று வருத் தத்துடன் வினவுகிறார் .
இதற்கிடையே, மாணவர்கள் போல சீருடை அணிந்த சமூக விரோதிகள், கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக வதந்தி பரவியது. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதை யடுத்து, வதந்திகளை நம்ப வேண் டாம் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத் துள்ளார். ‘அரசின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்று எச்சரிக்கிறார் உள்துறை அமைச்சர் அசாதுசாமான் கான் கமால்.
இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும், “இரண்டு தினங் களுக்கு முன்பு இந்தியாவில் ஒரு சாலை விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். அங்கே இப்படியா போராட்டம் நடத்துகிறார்கள்?” என அமைச்சர் ஒருவர் கூறியது தான் பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்தியது. இந்தப் போராட் டத்தால் டாக்கா மாணவர்கள், உலகின் கவனத்தை தங்கள் பக்கம் இழுத்து இருக்கிறார்கள். ‘சாலை வன்முறை’ பல நாட்டு இளைஞர்களின் பேசுபொருளாகி இருக்கிறது.
ஆனால் சென்னையில்? ‘டாக்கா செய்தி’ இன்னமும் வந்து சேரவே இல்லை. அதைவிட, சாலை விபத்து களுக்கு எதிராக போராடுவதற்கான தார்மீக உரிமை நம் இளைஞர் களுக்கு இருக்கிறதா? இந்தக் கட்டுரை எழுதுகிற போதே, சென்னை அருகே நடந்த ஒரு விபத்து பற்றிய செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
கிழக்குக் கடற்கரை சாலையில், விபத்தில் சிக்கிய ஒருவரை அவருடன் வந்தவர்கள் அவசர மருத்துவ வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அதி வேகத்தில் வந்த கார் அவசர வாகனம் மீது மோதியதில் 3 பேர் பலியாயினர்; நால்வர் படுகாய முற்றனர். இதில் கவலைப்பட வேண்டிய முக்கிய அம்சம் – காரை ஓட்டியவர் – 17 வயது சிறுவன்.
சின்னஞ்சிறு வயதில் வாகனங் களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோரை என்ன சொல்வது? போக்குவரத்து விதிமீறல்களை நாகரிகத்தின் அடையாளமாக எண்ணி செயல்படும் இளைஞர் களை எந்தக் கணக்கில் சேர்ப்பது? சென்னை மாநகரின் போக்குவரத்து வழக்கங்கள் – நமது நாகரிக சீரழிவின் அடையாளங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது.
பிறரை மதிக்காமல், விதிமுறைக் கும் கட்டுப்படாமல், மனம்போன போக்கில் விரைகிற ‘சினிமாத்தன’ இளைஞர்களால், மாநகரப் போக்கு வரத்து, அபாயம் நிறைந்ததாக மாறி இருக்கிறது. காவல் துறையின் அணுகுமுறையும் கவலைப்பட வைக்கிறது. ‘பிரஸ்’, ‘போலீஸ்’ என்றெல்லாம் வாகனங்களில் குறிப்பிடுவதன் நோக்கம் என்ன? ‘நிறுத்தக் கூடாது’; ‘கேள்வி கேட் கக்கூடாது’; என்பதுதானே…?
இதைவிடவும் கேலிக் கூத்து – ஏதேனும் ஓர் அரசுத் துறையின் பெயருடன் சுற்றிவரும் தனியார் ஒப்பந்த வண்டிகள். பொதுவாக, எந்த அரசு அலுவலகத்திலும் புதிதாக வண்டிகள் வாங்கப்படுவ தில்லை; புதிதாக ஓட்டுநர்களும் நியமிக்கப்படுவதில்லை. எல் லாமே, ஒப்பந்த அடிப்படையில் ஓடும் வண்டிகள்தான். இந்த உண்மை, காவல் துறைக்கு தெரியாதா?
பிறகு எப்படி, மஞ்சள் நிற எண் பலகை இல்லாமல், தனிநபர், வண்டி உரிமையாளர் ஓட்டுவதற்கான வெள்ளை பலகையுடன், புதிய வண்டிகள் அரசு வண்டிகளாக விரைந்து கொண்டு இருக்கின்றன? மற்றொரு வேதனையான உண்மை – ஒப்பந்த வண்டிகளின் உள்ளே பயணிக்கிற அரசு அலுவலர்கள் எல்லாருமே படித்தவர்கள்; அதி காரம் கொண்டவர்கள். ஏதேனும் ஒரு வகையில் சட்டத்தை நிறை வேற்றும் பொறுப்பில் உள்ளவர் கள். அவர்களின் நேரடி பார்வை யில் தங்களது நாசிக்கு அடி யிலேயே, அப்பட்டமான விதிமீறல் கள் நடைபெறுகின்றன.
நமது சமுதாயம் போற்றி வந்த விழுமியங்கள், அறநெறிகள் எல்லாம் என்னவாயின? வங்கத்தில் டாக்கா நகர மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், சமுதாயத்தின் பால், பொதுமக்களின் மீது, அவர்கள் கொண்ட உண்மையான அக்கறையின் வெளிப்பாடு. அதை முன் நின்று நடத்துவதற்கான அத்தனை தார்மீக உரிமையும் இருப்பதாக அவர்கள் நம்புகின்ற னர். அதனால்தான், வங்க அரசும் உலக நாடுகளும் மாணவர்களின் சாலை பாதுகாப்புப் போராட்டத்தை வியந்து வியந்து பார்க்கின்றனர்.
சென்னையில் இன்றைய நிலவரம் என்ன? உலகத்துக்கு வழி காட்டும் நாகரிகமும் பண்பாடும் கொண்டவர்கள் நாம். இவற்றை மீட்டெடுப்பதற்கே, மாபெரும் மக்கள் போராட்டம் தேவைப் படுமோ?