EBM News Tamil
Leading News Portal in Tamil

சவுதி தாக்குதலில் ஏமனில் 70 பேர் பலி: 124 பேர் படுகாயம்

ஏமன் நாட்டின் மீது சவுதி அரேபிய விமானப் படை நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 124-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ரவுத்தி கிளர்ச்சிப் படைக் கும் இடையே கடந்த 2015 முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதியும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில் ஹவுத்தி கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள அல்-குடாய்டா துறைமுக நகரத்தை குறிவைத்து சவுதி அரேபிய விமானப்படை தாக்கு தல் நடத்தியுள்ளது. இதில் 70 பேர் பலியாகி உள்ளனர். 124-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிட மாக உள்ளது.
அல்-குடாய்டா துறைமுகத்தின் மூலம் ஹவுத்தி கிளர்ச்சிப் படை யினர் எரிபொருள், மருந்துகளை இறக்குமதி செய்து வருகின்றனர். எனவே இந்த நகரின் துறைமுகம், முக்கிய பகுதிகளைக் குறிவைத்து சவுதி அரேபியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
சவுதி உள்நாட்டுப் போரில் இதுவரை 10 ஆயிரம் பேர் உயிரிழந் தனர். சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என்று செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.